வெப்பநிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் நாளை (01) அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக செம்மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
மேல், தென், வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்த நிலைமை ஏற்படக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர இரத்தினபுரி, மொனராகலை, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலால் உணரக்கூடிய அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.