Breaking News

தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும் பேரினவாதம் : தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கை!

 


திரிக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வு முடிவுகளை வெளியிடுவதன் மூலம் வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற கோட்பாட்டைச் சிதைப்பதே பேரினவாதத்தின் முதன்மை நோக்கமாக இருப்பதாக தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கில் இவ்வாறான விஞ்ஞான பூர்வமற்ற, திரிக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வு முடிவுகளை வெளியிடுவதன் மூலம் வடக்கு-கிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற கோட்பாட்டைச் சிங்கள-பௌத்த பேரினவாதம் சிதைத்து வருகின்றது.

சிங்கள-பௌத்த மயமாக்கல் மூலமாக சிங்கள-பௌத்தர்களின் பாரம்பரிய வாழிடமாக வடக்கு-கிழக்கைக் மாற்றியமைத்து, தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதே சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் முதன்மை நோக்காக இருந்து வருகின்றது.

அரசின் அனுசரணையிலான விவசாயக் குடியேற்றத்திட்டங்கள் போலவே தமிழர் பகுதிகளில் இவ்வாறு பௌத்த தொல் பொருட் சின்னங்களைக் கண்டடைவது என்பதுவும், தமிழர்களின் தாயகத்தைச் சிங்களக் குடியேற்றங்கள் மூலம் ஆக்கிரமிப்பதற்கான முதற்படியாக எப்போதும் இருந்து வருகின்றமையே இவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மத்தியில் தமது இருப்புத் தொடர்பான அச்சத்தை ஏற்படுத்த காரணமாகின்றது.

இவ்வாறான பல நூற்றுக்கணக்கான வேலைத்திட்டங்களுள் (Pசழதநஉவள) வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விவகாரமும் ஒன்று.

சிங்கள-பௌத்த அரசியற் தலைவர்கள் பேசினாலும், அவர்களது செயற்பாடுகளும், இவ்வாறான நிகழ்வுகளின் போதான அவர்களின் மௌனங்களும் இன வெறுப்பூட்டும் பேச்சுகளும் இன நல்லிணக்கத்திற்கு எதிரான திசையிலேயே அமைந்துள்ளதாகக் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.