Breaking News

வதந்திக்கு முற்றுப்புள்ளி..! அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்!

 


நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இடாகி என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக கருத்துகளை பேசி சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.

சமீப காலமாக நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், நீண்ட நாட்களாக பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் சித்தார்த்துக்கும், நடிகை அதிதி ராவ் ஹைதரிக்கும் இன்று தெலங்கானாவில் உள்ள வனபர்த்தியில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.