Breaking News

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவித்தல்!

 


கிழக்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை காணப்படக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை தொடர்பான செம்மஞ்சள் எச்சரிக்கையையும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

இதன்படி மேல், வடமேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பமான வானிலை இன்றைய தினம் (11) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என அந்த அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.