சடுதியாக வீழ்ச்சியடைந்த சின்ன வெங்காயத்தின் விலை!
நாட்டில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக குறைந்துள்ளபோதும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஒரு கிலோ பால் மாவின் விலையை குறைக்கவுள்ளதாக வர்த்த அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக உள்ளுர் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் மிக வேகமாக குறைந்து வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக நாட்டில் மிகவும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கரட், போஞ்சி, கோவா, பச்சை மிளகாய் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றன.
அதன்படி, பொது சந்தையில் கரட் கிலோ 400 ரூபாய்க்கும், போஞ்சி ஒரு கிலோ 400 ரூபாயிற்கும் கோவா ஒரு கிலோ 450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது மேலும் தக்காளி ஒருகிலோ 320 ரூபாய்க்கும், லீக்ஸ் கிலோ 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பச்சை மிளகாய் 600 ரூபாய்க்கும் பீட்ரூட் கிலோ 500 ரூபாய்க்கும் புடலங்காய் கிலோ 220 ரூபாய்க்கும் பூசணிக்காய் கிலோ 190 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொழும்பு மெனிங் சந்தையிலும் அனைத்து மரக்கறிகளின் விலைகள் சடுதியான வீழ்ச்சியை அடைந்துள்ளன.
அதேநேரம், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதுடன் சின்ன வெங்காயத்தின் விலை வீழ்சியடைந்துள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.