CSK அணி தலைமையில் மாற்றம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற கோப்பை அறிமுக விழாவில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்ற நிலையில், தோனி பதிவியிலிருந்து விலகியமை தெரியவந்துள்ளது. எனினும் தோனி அணியில் முக்கிய வீரராக செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல்.-ன் 17-வது தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ரோயல் சேலங்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோத உள்ளமை குறிப்பிடத்தக்கது.