Breaking News

வாய்ப்பிற்கு நன்றி இயக்குநர் சார்: தனுஷை புகழ்ந்த செல்வராகவன்!

 


"உங்களை இயக்குவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை" என 'ராயன்' படத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிப்பது குறித்து X தளத்தில் நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

"வாய்ப்பிற்கு நன்றி இயக்குநர் சார். உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்" என இயக்குநர் செல்வராகவன் அதற்கு பதிலளித்துள்ளார்.

தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்திற்கு ராயன் என பெயரிட்டுள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் இந்த ஆண்டே வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், 'ராயன்' படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை தொடர்ந்து, இயக்குனர் செல்வராகவனும் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், செல்வராகவனின் போஸ்டருடன், "ராயன் உலகத்தில் செல்வராகவனை அறிமுகம் செய்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.