Breaking News

உயர்தர பாடநெறியைக் கொண்ட பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்!

 


”எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் இலங்கையில் உயர்தர பாடநெறியைக் கொண்ட பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

யாழ். இந்து வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்  போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் ”புதிய தொழிநுட்பத்தின் மூலம் பிள்ளைகள் நேரடியாக கல்வியைத் தொடர சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் நாட்டின் அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வியில் சம வாய்ப்புகளை வழங்குவதே கல்வி அமைச்சின் நோக்கம்  எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.