நாளை வெளியாகிறது சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே21 படத்தின் டீசர் !
சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்கே21' படத்தின் டைட்டில் டீசர் நாளை (பிப் -16) வெளியாகிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்கே21' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் , சோனி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது. இதில் ராணுவ வீரராக நடிக்கும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
'எஸ்கே 21' என அழைக்கப்படும் இப்படத்தின் டைட்டில் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு 17-ம் தேதி பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.