வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்- எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'தி கோட்' (The Greatest Of All Time). இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். மேலும், தனது 69-வது படத்திற்கு பிறகு தான் நடிக்க போவதில்லை என்றும் முழு நேர அரசியல் ஈடுபடவுள்ளதாகவும் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தார்.
விஜய் அரசியலுக்கு வந்தது தொண்டர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும் சினிமாவை விட்டு விலகுவதாக கூறியது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருப்பக்கம் இருந்தாலும் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், விஜய்யின் 69-வது படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டிவிவி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெற்றிமாறன் விஜய்யிடம் கதை சொல்லியிருந்த நிலையில் இருவருக்கும் இருந்த அடுத்தடுத்த பட வேலைகளால் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.