தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் வேட்பாளரைத் தெரிவிப்போம் : நாமல்!
தேர்தல் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பதை நாம் அறிவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசியலமைப்பின் பிரகாரம் இந்தவருட இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தேர்தல் ஒன்று நடத்தப்படும் பட்சத்தில் கட்சி என்ற ரீதியில் அதற்கு தயாராக வேண்டும். ஆனால் ஒரு சிலர் தேர்தல் நடத்தப்படுவதை விரும்பவில்லை.
பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் நாம் ஒரு வேட்பாளரை முன்னிலைப்படுத்துவோம். கட்சி என்ற என்ற ரீதியில் நாம் தேர்தலுக்கு தயாராகவே உள்ளோம்.
வேட்பாளரை தெரிவு செய்வது மற்றும் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் நாம் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றோம்.
தேர்தல் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பதை நாம் அறிவிப்போம்.
தற்போதைய சூழ்நிலையில் நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் நெருக்கடிகளுகளுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலேயே ஆராய வேண்டும்” என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.