Breaking News

மோசமான நிர்வாகத்தின் விளைவே வற் வரி அதிகரிக்க காரணம் – சம்பிக்க!

 


அரசாங்கத்தின் மோசமான பொருளாதார முகாமைத்துவத்தின் காரணமாகவே வற் வரி அதிகரிப்பு ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிர்வகிப்பதன் மூலம் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அகவே சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி பின்னர் பொருளாதார அபிவிருத்திக்கான திருத்தப்பட்ட செயற்திட்டமொன்று ஆவணப்படுத்தப்பட வேண்டுமென சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது நிர்ணயித்த 16 இலக்குகளை தற்போதைய அரசாங்கம் முழுமையாக நிறைவேறவில்லை என்றும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.