ஜய் கட்சி பாடலுக்கு இசையமைக்க ரெடி - சந்தோஷ் நாராயணன்!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் சந்தோஷ் நாராயணன். இவர் திரையிசை தவிர்த்து இசை சார்ந்து பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். அந்த வகையில், "நீயே ஒளி" இசை கச்சேரி தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டார்.
அப்போது, விஜயின் அரசியல் வருகை குறித்தும், அவரது அரசியல் கட்சிக்கான பாடலுக்கு இசையமைப்பீர்களா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சந்தோஷ் நாராயணன், "இசைக்கு ஒரு சக்தி இருக்கு. அது ஒருவரின் முடிவை மாற்றக்கூடியது. ஒருவரிடம் பேசி முடிக்க முடியாத விஷயத்தை, கலையை கொண்டு புரிய வைக்க முடியும். அவரிடம் நானாக சென்று, நானே இசையமைக்கிறேன் என்று கேட்க முடியாது. நான் என் வாழ்நாளில் அப்படி செய்ததே இல்லை."
"அவர்களின் கட்சி கொள்கை என்ன, அவர்கள் முன்னிறுத்தும் பிரச்சினை என்ன? நான் இசையமைக்கும் பாடல் எந்த வகையிலும் விளம்பரமாக மாறிவிடக்கூடாது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு என் மனம் சாந்தம் அடைந்த பிறகு, பாடலை தயாரிக்க முடியும். அவரின் முடிவை வரவேற்கிறேன். அவரின் கொள்கைகள் பொறுத்து, அவருக்கான ஓட்டு தீர்மானமாகும்," என்று தெரிவித்தார்.