ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க போகும் புதிய படம்: ஹீரோ யார் தெரியுமா?
தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இத்திரைப்படம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறாததால் சினிமாவிலிருந்து சிறுது காலம் அவர் விலகியிருந்தார்.
இந்நிலையில், நீண்ட வருடங்கள் கழித்து அவர் லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். அப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
லால் சலாம் படத்திற்கு பிறகு, மீண்டும் ஒரு சமூக பிரச்சனையை மையமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கதை எழுதியுள்ளதாகவும், அந்த கதையை நடிகர் சித்தார்த்திடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது, கூடிய விரைவில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.