Breaking News

இலங்கையில் உச்ச வெப்பத்தால் ஏற்பட்டுள்ள அச்சம்!

 


பல மாவட்டங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சூரிய வெளிச்சத்தில் அதிக நேரம் இருப்பதால் சோர்வு ஏற்படும் என்றும், அது தொடருமாயின் வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.