மின்சாரக் கட்டணங்களில் மீண்டும் திருத்தம்!
எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் மின்சார கட்டணங்களில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ள பொது ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை முதல்பொது மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.