அதிபர் வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினா மாகாணத்தில் ஜோபைடன் வெற்றி!

 


அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் களமிறங்க தற்போதைய அதிபர் ஜோபைடன் திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து அக்கட்சியின் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இதில் தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த தேர்தலில் ஜோபைடன் வெற்றி பெற்றார்.

அவர் டீன் பிலிப்ஸ், மரியன்னே வில்லியம்சன் உள்ளிட்டோரை தோற்கடித்தனர். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இதனால் அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோபைடன்-டிரம்ப் மோத உள்ளனர்.