நாடாளுமன்றம் தொடர்பான விசேட அறிவித்தல்!
இலங்கையின் 09ஆவது நாடாளுமன்றத்தின் 5ஆவது அமர்வு எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் சம்பிரதாயபூர்வமாக அமர்வு இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் ஜனாதிபதியினால் முன்வைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பில் சபை ஒத்திவைக்கப்படும் வேளையில் விவாதம் நடத்தப்படும் திகதியும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெப்ரவரி 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட கட்சித் தலைவர் கூட்டத்தில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.