Breaking News

யாழ் பல்கலைக்கழக மாணவன் விபத்தில் உயிரிழப்பு‼️


யாழில் வீதிக்கு குறுக்கே திடீரென நாய் சென்றதால் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக் கழக மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இன்று(21) அதிகாலை தனது வீட்டிலிருந்து நீா்வேலிக்கு மோட்டாா் சைக்கிளில் பயணித்தபோது வீதியின் குறுக்கே பாய்ந்த நாயுடன் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 

இவ் விபத்தில், காயமடைந்த மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா். மானிப்பாய் வேம்படி பகுதியை சோ்ந்த யாழ்.பல்கலைகழக 1ம் வருட கலைப்பிாிவில் கல்வி பயிலும் 22 வயதுடைய ரமேஷ் சகீந்தன் என்ற மாணவனே விபத்தில் உயிாிழந்துள்ளாா்.