SK 23 படக்குழுவுடன் பிரம்மாண்ட கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 39-ஆவது பிறந்தநாளை, SK23 படக்குழுவினருடன் பிரம்மாண்ட கேக் வெட்டி, பிரியாணி விருந்தோடு கொண்டாடியுள்ளார்.
அமரன் படத்தின் படப்பிடிப்பை முடிந்த கையோடு, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தன்னுடைய SK23 ஆவது படத்தை நடித்து வருகிறார். இப்படம் ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் பேனரில் திருப்பதி பிரசாத் படத்தை தயாரிக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு துவங்கிய நிலையில், முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிக்கிறார்
'SK23' படம் குறித்து மனம் திறந்து பேசிய இயக்குனர்ஏ.ஆர். முருகதாஸ், "இப்படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க சென்னையை மையப்படுத்திய ஆக்ஷன் கதையாக இது இருக்கும். சூர்யாவின் 'கஜினி' படத்தில் எப்படி ஆக்ஷன் காட்சிகளை ரசித்தீர்களோ, அதுபோலவே இந்தப் படத்திலும் இருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன், படக்குழுவினருடன் பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி விருந்து படைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.