விடுமுறைக்காக வெளிநாடு சென்ற கனடா பிரதமர்: விமானம் மீண்டும் பழுதானதால் அதிர்ச்சி!
கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக ஜமைக்கா நாட்டிற்குச் சென்றிருந்தார். பயணம் முடிந்து ஜனவரி 4-ம் தேதி அவர் கனடா திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஜனவரி 3-ம் தேதி அவரது விமானத்தை தயார் செய்வதற்காக அதை பரிசோதித்த பராமரிப்புக் குழுவினர், விமானத்தில் பழுது இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து பழுதை சரிசெய்வதற்கான குழுவுடன் மற்றொரு விமானம் ஜமைக்கா சென்றது. பழுது பார்க்கப்பட்டதும் இரு விமானமும் கனடா திரும்பின. கடந்த ௩ மாதத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விமானம் இரண்டு முறை பழுதாகியுள்ளது.
ஏற்கனவே, ஜி20 மாநாட்டுக்காக இந்தியா வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மாநாடு முடிந்து திரும்புகையில் செல்லவேண்டிய விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.