மின்சார கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தல்!
எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனமும், மின்சார சபையும் தற்போது பெரும் இலாபம் ஈட்டி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் மின்சார சபை கணிசமான இலாபத்தை ஈட்டியுள்ளதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.