Breaking News

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதி!

 


VAT வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை காரணமாக அரிசி, பருப்பு, சீனி, வெங்காயம் உள்ளிட்ட பல அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் உச்சத்தைத் தொட்டுள்ளன.

அந்தவகையில்   VAT  வரி விதிப்புக்கு  முன்னர் 300 ரூபாயாக இருந்த 1 Kg சீனியின் விலை தற்போது 350 ரூபாயாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை VAT என்ற போர்வையில் சில வர்த்தகர்கள் கட்டுப்பாடற்ற வகையில் பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பனை செய்வதாகவும், இதனால் பொருட்களை கொள்வனவு செய்யமுடியாமல் தவித்து வருவதாகவும், நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.