Breaking News

சுமந்திரனை வீழ்த்தி தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரானார் - சி. சிறீதரன்!

 


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் இன்று(21) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் வாக்கெடுப்பு திருகோணமலையில் இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் 186 வாக்குகளை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனும் சுமந்திரன் 137 வாக்குகளையும் பெற்றனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி வரலாற்றில் தலைவர் ஒருவர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.