அரச ஊழியர்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024 ம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவுக்கான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்படி அரச ஊழியர்களுக்கான 5 ஆயிரம் கொடுப்பனவு இந்த மாதத்தில் இருந்தும், எஞ்சிய 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு ஏப்ரல் மாதத்திலிருந்தும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக தற்போது சுமார் 95 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் ஜனவரி மாதம் முதல் இந்த பணம் மேலும் 7 பில்லியன் ரூபாயால் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்;.
மேலும் பணம் அச்சிடுதல் மற்றும் கடன் பெற்றுக் கொள்ளல் போன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதால், செலவினங்களைக் குறைத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதன் மூலம் மாத்திரமே இந்த மேலதிக நிதியைப் திரட்ட முடியும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.