Breaking News

வாகன உரிமையாளர்களுக்கு விசேட அறிவிப்பு!

 


மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் உரிமையாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் தமது பதிவை கூடிய விரைவில் மாற்றுமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸ் சிசிடிவி. டிக்கட் வழங்கப்படும் போது, அந்தச் சீட்டு வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், வாகனம் வேறு ஒருவரால் பயன்படுத்தப்பட்டால், பதிவு செய்யப்பட்ட உரிமையாளருக்கு சிரமம் ஏற்படலாம் எனவும் வீரசிங்க குறிப்பிட்டார்.

பதிவு செய்யப்பட்ட உரிமையாளரின் பெயரில் வாகனங்களை பயன்படுத்தவும் விற்கவும் முடியாது என்றும், வாகன விற்பனையாளர் வாகனத்தை வேறு தரப்பினருக்கு மாற்றியதாக திணைக்களத்திற்கு கடிதம் அனுப்பினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் வீரசிங்க கூறினார்.