உயர் தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்!
தொடரும் அனர்த்தங்களினால் போக்குவரத்து இடையூறுகளை சந்திக்கும் உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
பதுளையில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணிக்க சிரமப்படும் உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகள் பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்ற முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பண்டாரவளையில் இருந்து பதுளை நோக்கி பயணிக்க சிரமப்படும் பரீட்சார்த்திகள் பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.