நடிகர் விஜய்சேதுபதி மீதான கிரிமினல் வழக்கு- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!
நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் மகா காந்தி பரஸ்பரம் தாக்கி கொண்ட விவகாரத்தில் விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது. தன்மீதான விசாரணைக்கு தடைக்கோரி விஜய் சேதுபதி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இருதரப்பும் பரஸ்பரம் பேசி தீர்வு காணும்படி கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த விவகாரம் தொடர்பாக பேசி தீர்க்க அறிவுறுத்தப்பட்டதே? அது என்ன ஆனது என்று கேட்டனர்.
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறினார்கள். மேலும் இந்த விவகாரத்தில் தன்னை குறித்து எதிர்தரப்பினர் தான் அவதூறு பரப்பியதாக விஜய் சேதுபதி தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் விஜய்சேதுபதியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளு படி செய்தனர். கிரிமினல் அவதூறு வழக்கை கீழமை நீதிமன்றத்தில் சந்திக்க விஜய் சேதுபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.