Breaking News

முதல் பயணத்தை ஆரம்பித்த டைட்டானிக்கை விட ஐந்து மடங்கு பெரிதான 'ஐகன் ஒஃப் தி சீஸ்' கப்பல்!

 


ரோயல் கரீபியன் நிறுவனத்துக்கு சொந்தமான உலகின் மிகப் பிரம்மாண்டமான பயணிகள் சொகுசு கப்பலான 'ஐகன் ஒஃப்  தி சீஸ்' (Icon of the Seas) அதன் முதலாவது பயணத்தை ஆரம்பித்துள்ளது. 

ஃப்ளோரிடா, மியாமியில் இருந்து பயணத்தை தொடங்கியுள்ளது. 

ஐகன் ஒஃப் தி சீஸ் கப்பல் தனது முதல் பயணத்தின்போது கரீபியன் தீவுகளை 7 நாட்கள் சுற்றி வரவுள்ளது. 

இந்த சொகுசு கப்பலின் நீளம் 365 மீட்டர் ஆகும். 

20 தளங்கள் கொண்ட இந்த கப்பலில் 7 நீச்சல் தடாகங்கள் உள்ளதாகவும், இது, 7600 பேர் பயணிக்குமளவில் பிரம்மாண்டமானது என தெரிவிக்கப்படுகிறது. 

முக்கியமாக,  ஐகன் ஒஃப் தி சீஸ் கப்பல் டைட்டானிக் கப்பலை விட ஐந்து மடங்கு பெரியது என்பது சுவாரஸ்யமான தகவல்.

இதேவேளை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இந்த கப்பலில் இருந்து ஆபத்தான மீத்தேன் வாயு வெளியேறும் என்கிற அதிர்ச்சித் தகவலையும் வெளிப்படுத்தியுள்ளனர்.