Breaking News

அதிகரித்தது பால்மாவின் விலை!

 


இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால் மா பொதியின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.