மீண்டும் அதிகரித்த மரக்கறிகளின் விலை!
விவசாய அமைச்சின் கீழ் இயங்குகின்ற நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய பொது சந்தையில் கொள்வனவு செய்யப்படும் மரக்கறிகளின் விலை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 1 kg கரட் 1250 ரூபாய்க்கும், கோவா 470 ரூபாய்க்கும், லீக்ஸ் 480 ரூபாய்க்கும், இலை பீட்ரூட் 420 ரூபாய்க்கும், இலை இல்லா பீட்ரூட் 520 ரூபாய்க்கும், உருளை கிழங்கு 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறிகளுக்கான விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.