வாக்குறுதி அரசியலே நாட்டின் பொருளாதாரத்தை அழித்தது - ரணில் விக்ரமசிங்க!
வாக்குறுதி அரசியலே நாட்டின் பொருளாதாரத்தை அழிவுக்கு இட்டுச் சென்றது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே, தேர்தல் ஒன்றுக்கு தயாராகும் அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டத்தைத் கொண்டிருக்க வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (26) நடைபெற்ற சுங்கத் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்ட விடயங்களை வலியுறுத்தினார்.