யாழ் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை காணியில் அளவீட்டு பணிகள்!
யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணியில் இன்று (வெள்ளிக்கிழமை) அளவீட்டு நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கீரிமலை ஜனாதிபதி மாளிகையை கையளிக்கும் நோக்கில் இன்றைய தினம் அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான் மற்றும் புதுக்காடு, சோலை சேனாதிராயன் என அழைக்கப்படும் பகுதிகளிலேயே இந்த நில அளவீடு இடம்பெறவுள்ளது.
மேலும் இந்த அளவீட்டு பணிகள் இன்று முதல் தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.