அரிசி இறக்குமதிக்கு தனியாருக்கு அனுமதி?
கீரி சம்பா வகை அரிசிக்கு சமமான 50 ஆயிரம் மெட்ரிக் தொன் ஜி.ஆர். 11 வகை அரிசியை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு வாய்ப்பு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக உணவு கொள்கைகள் குழுவின் விதந்துரைக்கு அமைய 50,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்காக நவம்பர் 20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
உள்நாட்டுச் சந்தையில் கீரிச் சம்பா அரிசி மற்றும் சம்பா அரிசி ஆகியவற்றின் விலைகளில் போட்டித்தன்மையை ஏற்படுத்தி, விலையின் நன்மையை நுகர்வோருக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, கீரி சம்பா அரிசிக்கு சமமான 50,000 மெட்ரிக் தொன் புசு 11 அரிசியை தனியார் துறை மூலம் இறக்குமதி செய்வதற்காக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.