பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை!
“எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக” பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”குறித்த பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளார்.
இதன் படி பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதிகளில் சிவில் உடையணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.