Breaking News

யாழ். போதனா வைத்தியசாலைக்கு வரும் பார்வையாளர்களுக்கு விசேட அறிவிப்பு!

 


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மீண்டும் பார்வையாளர் அனுமதிப் பத்திரம் (pass) முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகரித்த பார்வையாளர்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல்கள், திருட்டுச் சம்பவங்கள், நோய்த் தொற்றுக்கள், நோயாளர் பராமரிப்பில் இடையூறுகள் என்பன ஏற்படுவதால் நேற்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் பார்வையாளர் அனுமதிப்பத்திரம் (pass) மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது ஒரு நோயாளருக்கு தலா இரு அனுமதிப்பத்திரம் எனும் அடிப்படையில் நோயாளரை அனுமதிக்கும் பகுதியில் பெற்றுக் கொள்ள முடியும்.

சிறப்பான நோய்ப்பராமரிப்பு வழங்குவதனை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த ஒழுங்கு முறைக்கு அனைத்து பார்வையாளர்களும் ஒத்துழைப்பினை வழங்கும்படி கோரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.