Breaking News

மாவீரர் நினைவேந்தலை தடை செய்ய பொலிஸார் முஸ்தீபு!

 


மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரி மானிப்பாய் பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கு தொடர்பான கட்டளை எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடைவிதிக்ககோரி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரின் விடப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் மட்டக்களப்பு மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் விடுத்த கோரிக்கையே நிராகரிக்கப்பட்டதாக சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நினைவேந்தலை தடுப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட இரண்டு முயற்சிகள் முறியடிக்கப்பட்டது என்றும் எனவே எந்தவித தடைகளும் இன்றி நினைவேந்தல்களை மேற்கொள்ள முடியும் என்றும் சுமந்திரன் தெரிவித்தார்.