Breaking News

சிறுவனின் உயிரை காப்பாற்ற உதவிய ஜி.வி.பிரகாஷ்!

 


பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த 'பேச்சுலர்', 'ஐங்கரன்', 'ஜெயில்' போன்ற படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷ் ஒரு சிறுவனின் உயிரை காப்பாற்ற உதவி செய்துள்ளார். அதாவது, ஒரு வயது சிறுவனின் மூளைக்கு அருகே கட்டி ஒன்று இருந்ததாகவும் அதை சரி செய்ய உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதற்காக சமூக வலைதளம் மூலம் சம்பந்தபட்ட நபர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிடம் உதவி கேட்டார். இதை பார்த்த ஜி.வி.பிரகாஷ் அவருக்கு ரூ.75,000 பணம் அனுப்பி உள்ளார். இது தொடர்பான ஸ்கிரீன் ஸாட்டை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஜி.வி.பிரகாஷ் 'என்னால் முடிந்த சிறு உதவி 'என்று குறிப்பிட்டுள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.