கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கான அறிவித்தல்!
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் கூற்றுப்படி, கையடக்க தொலைபேசி சிம்களை புதுப்பிக்கும் நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் கையடக்க தொலைபேசி சிம் மீள் பதிவு சேவையை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் சிம் கார்டைத் தமது பெயரில் பதிவு செய்து கொள்வது கட்டாயம் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
உங்கள் கையடக்க தொலைபேசி இருந்து #132# ஐ டயல் செய்வதன் மூலம், உங்கள் அடையாள அட்டை எண்ணின் கீழ் உள்ள கையடக்க தொலைபேசி எண்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்களின் அடையாள அட்டையில் மற்ற சிம்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், உடனடியாக அந்த சிம்களை ரத்து செய்ய வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு கூறுகிறது.
அவ்வாறு செய்யாமல், சிம் மூலம் முறைகேடுகளை யாராவது செய்தால், அதற்கு அடையாள அட்டை உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று ஆணையம் கூறுகிறது.
மேலும் நபர் ஒருவர் பயன்படுத்தும் சிம் கார்ட் தனது பெயரில் பதிவு செய்யப்படாத பட்சத்தில், அவர் பயன்படுத்தும் சிம் கார்ட் வைத்திருக்கும் தொலைபேசி நிறுவனத்தை தொடர்பு கொண்டு அந்த சிம்கார்டை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.