இலங்கை கிரிகெட் தொடர்பான தீர்மானம்!
இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்ற கூட்டுத் தீர்மானம் ஒன்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (08) பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாராளுமன்றத்தில் நாளையதினம் (09) விவாதம் நடத்தப்பட்டு பிற்பகல் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.