மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பம்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.
எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மாவீரர் துயிலும் இல்லங்களை சிரமதான அடிப்படையில் தூய்மைப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பின் பிரதான மாவீரர் துயிலும் இல்லமாக கருதப்படும் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் இந்த சிரமதான பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த சிரமதானத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தின் உறுப்பினர் நிதர்சன், ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.