Breaking News

அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

 


2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி அனைத்து அரச ஊழியர்களுக்கும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகளாக 10,000 ரூபாய் மேலதிகமாகப் பெறுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் அரச துறை ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து 17,800 ரூபாய் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதேவேளை, நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரச செலவினங்களை கவனமாக முகாமைத்துவம் செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.