Breaking News

தொடர்ந்து நிராகரிக்கப்படும் போலீசாரின் மாவீரர் நினைவேந்தல் தடை மனுக்கள்!



 தெல்லிப்பளை மற்றும் அச்சுவேலி பொலிஸாரால் மாவீரர் நாள் நினைவேந்தலுக்குத் தடை கோரிய விண்ணப்பம் சற்றுமுன்னர் மல்லாகம் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரி கடந்த வெள்ளியன்று மல்லாகம் நீதிமன்றத்தில் மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை (21) வழங்கப்படவுள்ளது.

மேலும் நினைவேந்தலுக்குத் தடை கோரிய வல்வெட்டித்துறை பொலிஸாரின் கோரிக்கை கடந்த வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது.

இதேநேரம் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடைவிதிக்கக் கோரிய பொலிஸாரின் விண்ணப்பம் கடந்த வாரம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.