கமலுடன் இணைந்த திரிஷா - உற்சாகத்தில் ரசிகர்கள்!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசனின் 234-வது படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார். 36 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் அறிமுக வீடியோ இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து இன்று காலை முதல் இப்படத்தின் அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
இதற்கு முன்பு துல்கர்சல்மான் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அறிவித்திருந்த படக்குழு தற்போது நடிகை திரிஷா இணைந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் திரிஷா குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.