Breaking News

ஆக்ரோஷமான தோற்றத்தில் ரிஷப் ஷெட்டி- வைரலாகும் காந்தாரா போஸ்டர்!

 


கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.

ரூ.8 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இப்படத்திற்கு 'காந்தாரா- ஏ லெஜண்ட் பாகம் 1' என தலைப்பு வைத்துள்ளதாகவும் இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆக்ரோஷமாக ரிஷப் ஷெட்டி இருக்கும் இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.