இரு கப்பல்கள் நடு கடலில் மோதியதில் பலர் உயிரிழப்பு!
ஜேர்மனி கடற்பரப்பில் இரு சரக்குகப்பல்கள் மோதிய விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனியின் வடக்குகிழக்கு கடற்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரிட்டன் கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த வெரிட்டி என்ற கப்பல் பஹாமாவை சேர்ந்த பொலைசி என்ற கப்பலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வெரிட்டி கப்பல் மூழ்கியுள்ளது அதன் ஏழு பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என ஜேர்மன் தகவல்கள் தெரிவித்துள்ளன.