O/L பரீட்சை பெறுபேறுகளை நவம்பர் மாதம் வெளியிட தீர்மானம்!
கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை நவம்பர் மாதம் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று பரீட்சை பெறுபேறுகளை கணினிமயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக, நாம் அவரை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சை கடந்த மே மாதம் நடைபெற்றது.
இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாத்தாள்களை, பரீட்சையின் பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடாக விநியோகித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.