Breaking News

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு!

 


காஸா பகுதியில் இடம்பெறும் போர் நிலைக்கு மத்தியில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 5.7% அதிகரித்து 91.20 டொலராகக் அதிகரித்துள்ளது.

ஆனால் இன்று (16) உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் காஸா பகுதியில் இடம்பெறும் போர் மற்ற பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.