Breaking News

மீண்டும் விலையேற்றம்… வீதிக்கு இறங்க தயாராகும் மக்கள்!

 


வரி செலுத்த வேண்டிய மக்களிடம் இருந்து உரிய முறையில் வரியை அறவிடாமல் அரசாங்கம் தொடர்ந்தும் மின் கட்டணத்தை அதிகரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

பொரளை இளைஞர்கள் பௌத்த சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனையை பிரபலப்படுத்துவதற்காக சில அரசாங்க அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வரி அறவிடாமல் புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை அமைச்சர்கள் ஊடாக பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.