Breaking News

தனியார் வசமாகிறதா மின்சார சபை?

 


”மின்சார சபை மறுசீரமைப்பு என்ற பெயரில் இலங்கையின் மின்சார சபையை தனியாருக்கு விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக” மின்சார  நுகர்வோர் சங்கம்  குற்றம் சுமத்தியுள்ளது.

18 வீதத்தால் மூன்றாவது முறையாகவும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையிலேயே குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது வருடத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை அதிகரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் , பொதுமக்கள் நெருக்கடியில் இருக்கும் போது அரசாங்கம் முன்னெடுக்கும் இச்  செயல் அபத்தமானது என்றும் இச்செயல் தொடர இடமளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.